Saturday, 28 January 2017

நாட்டு நாய்கள்


நாட்டு நாய்கள்



“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:
“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.
தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.
கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும்.
பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம்.
நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.
ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.
வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.
இப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.
இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.
கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள். எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.
பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.
நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.
தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.
ஏன்என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.
எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்.

கலப்பினப் பால்... நாட்டுப்பசும்பால்... எது நல்லது?

கலப்பினப் பால்... நாட்டுப்பசும்பால்... எது நல்லது?



பால் மனிதனின் முதல் உணவு. குழந்தையாய் கண் விழித்தது முதலே பாலுக்கும் மனிதனுக்குமான பந்தம் தொடங்கிவிடுகிறது. தாய்ப்பால் இல்லாத குழந்தைகளையும் அமுதூட்டி காக்கும் அரும்உணவு பால்தான். இந்தியர்கள் பாலுக்கும் பால் பொருட்களுக்கும் உணவில் தரும் முக்கியத்துவம் பெரிது. அதனால், உலகின் மிகப்பெரிய பால் சந்தையாக நம் தேசம் இருக்கிறது. இதுதான் பால் முதல் ஜல்லிக்கட்டு வரை சகலத்திலும் செயல்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... ஜெர்ஸி பால் தேவை இல்லை என்றும் நாட்டுமாட்டின் பாலே சத்தானது என்றும் ஒரு சாரார் பேசி வருகிறார்கள்... நாட்டுமாட்டின் பால் ஏன் சிறந்தது? அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது குறித்து விரிவாகப் பேசுகிறார் கால்நடை மருத்துவர் காசி பிச்சை. பசும் பால் கிடைக்காதவர்கள், இதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம்.
நாட்டுப்பசும்பால்
பாலில் புரதச்சத்து அதிகம். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்புச்சத்து,ஒற்றை நிறைவுறா கொழுப்புச்சத்து, பன்மைநிறைவுறா கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, ஏ2 காஸின் புரதம் (A2 Casein Protein) நாட்டு மாடுகளின் பாலில் மட்டுமே உள்ளது. இது, உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளைக் கொடுத்து உடலை வலுவாக்குகிறது.
கலப்பினப் பசுவின் பால்
மேலை நாட்டு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் ஏ1 காஸின் புரதம் உள்ளது. மேலும், இதில் ட்ரியான் (Trion) என்ற வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் உடனடியாக உடலைப் பாதிக்காது என்றாலும், நாட்பட்ட அளவில் 20-30 வருடங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
தொடர்ந்து கலப்பினப் பசுவின் பாலைப் பருகிவரும்போது, அல்சைமர், ஆண்மைக்குறைவு, விரைவில் விந்து வெளிப்படுதல், நரம்புத்தளர்ச்சி மற்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இந்தியாவில், கடந்த 30 வருடங்களாகப் புழங்கிவரும் கலப்பின மாட்டுச் சந்தையால், பவுடர் பால் பெருகியது. பவுடர் பால் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைப் பருகும் காரணத்தால் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகரித்துவருகிறது.
கலப்பின மாடுகளால் தமிழகத்தின் தட்பவெப்பநிலையில் உயிர்வாழ முடியாது. நன்கு குளிரூட்டப்பட்ட அறையில்தான் இவற்றால் இருக்க முடியும். முற்றிலும் வணிக நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டவை இவை. அதிகமான பால் தர வேண்டும் என்பதற்காகவே, கலப்பின மாடுகளுக்குப் பல்வேறு ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. இந்த ஊசிகளில் உள்ள ரசாயனம், மாட்டில் ரத்தம், பால் ஆகியவற்றில் கலக்கும். இவற்றைப் பல வருடங்களுக்குத் தொடர்ந்து பருகினால் சர்க்கரைநோய், புற்றுநோயில் இருந்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாட்டுமாடுகள் ஏன் சிறந்தவை?
தாமிரபரணி ஆற்றின் அருகே வளரும் மாடுகள் தாமிரம் அதிகம் உள்ள நீரைப் பருகி வளர்பவை. அந்த நீரில் விளையும் புற்களைச் சாப்பிடுவதால் அவற்றின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். சில மாடுகள் மக்னீசியம் அதிகம் உள்ள ஆற்று நீரைப் பருகி வளர்வதால், உயரம் குறைவாக இருக்கும். இப்படி வளரும் இடத்துக்குத் தகுந்தாற்போல் மாட்டின் உடல் தன்மை, அவை சுரக்கும் பாலின் மூலக்கூறுகள் மாறுபடும். தமிழக மக்கள், தாங்கள் வாழும் பகுதியில் வளரும் நாட்டுமாடுகள் மூலமாகக் கிடைக்கும் பாலையே குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது. மேலை நாட்டு மாடுகளின் பால், நம் நாட்டவர் உடலுக்கு இயல்பாகவே ஒப்புக்கொள்ளாது.
ஒரு லிட்டர் நாட்டு மாட்டுப் பாலில் 30 மி.லி, தூக்கம் வரவழைக்கும் ரசாயனம் உள்ளது. இது சராசரியான அளவு. இதுவே, கலப்பின மாடு சுரக்கும் பாலில் 50 மி.லி-யாக உள்ளது. இதனால், இதனைப் பருகும் கைக்குழந்தைகள் அதிகமாகக் தூங்குபவர்களாகவும் மந்தத்தன்மைகொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பசும்பால் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
நாம் குடிக்கிற டீயில் பாலைத் தவிர்த்துவிட்டு பிளாக் டீ சாப்பிடலாம். அதில் புதினாவைப் போட்டு புதினா டீயாக அருந்தலாம். சுக்கு மல்லி, இஞ்சி டீ என பால் இல்லாத டீ வகைகளைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பாலுக்குப் பதிலாக என்ன கொடுப்பது?
குழந்தைகளுக்கு பல் முளைக்கத் தொடங்கியதுமே பாலை நிறுத்திவிட வேண்டும். `பாலில் கால்சியம் இருக்கிறது, பால் சாப்பிட்டால்தான் கால்சியம் கிடைக்கும்’ என்பதே தவறான புரிதல். உடலுக்கு என்ன சத்து தேவையோ, அதனை நாம் சாதாரணமாகச் சாப்பிடுகிற உணவுகளில் இருந்தே உடல் தயாரித்துக்கொள்கிறது. இயற்கையான கீரைகள், காய்கறிகள் இவற்றைச் சாப்பிட்டாலே போதும்... உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்துவிடும். தாய்ப்பாலையும் குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் நிறுத்திவிட வேண்டும். உடலின் பால் தேவை அவ்வளவுதான். பல் முளைக்கிறது என்றால் திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். பசும்பாலை கொடுத்துப் பழக்காமல் பழச்சாறுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நல்ல மாற்று உணவு. தாய்ப்பாலுக்கு நிகரான ஆற்றல் தேங்காய்ப்பாலில் இருக்கிறது.
- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

யாளி

யாளி



தமிழர்களின் கற்பனை மிருகமான "யாளி".
இவை தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் இதனை காணலாம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

Sunday, 14 June 2015

பிளாட்டிபஸ்’


பிளாட்டிபஸ்’



பிளாட்டிபஸ்’ என்னும் இந்த உயிரினம் மிகச் சிறிய பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். இவை முட்டையிட்டு பாலுட்டும் தன்மை கொண்டது இவை மற்ற பாலூட்டிகளினின்று எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் இவைகளின் செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள் இவற்றை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘பிளாட்டிபஸ்’ முட்டையிட்டு குஞ்சு பொரித்து தன் குஞ்சுகளுக்கு பால் கொடுப்பது மற்றும் அதன் உடல் அமைப்பு மற்ற எல்லா விலங்கிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். ‘வாத்து’விற்கு உள்ளது போன்ற வாய் அமைப்பு. கால்களில் அமையப்பெற்ற விஷச்சுரப்பி. கழுத்து என்பதே இல்லாத ஓர் உயிரினம். இவை தாஸ்மேனியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், பல வகைகளிலும் வித்தியாசமான செயல்பாடுகளும் உடல் தகவமைப்புகளும் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்பியல்புகளாகும். 30 முதல் 40 செ.மீ. வரை நீளமும் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை வளரக்கூடியவை. இவற்றின் வாய் அமைப்பு வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் அலகு போன்ற வாய் அமைப்பு 6 செ.மீ. வரை நீளமும் 5 செ.மீ. வரை அகலமும் உடையது. இவற்றின் வாயுடைய நுனிப்பகுதியில் மிருதுவான மோப்ப சக்தியை உணரக்கூடிய சதைப்பகுதியை கொண்டுள்ளது. (பன்றியின் வாய் பகுதியைப் போன்று), வாலும் உடலும் தடித்த மிருதுவான ரோமங்களை உடையதாகவும் பிதுங்கியது போன்ற தோற்றத்திலும் காணப்படுகின்றது. இவற்றின் வால் பகுதி தட்டையாகவும் சிறியதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் முக்கியமான எடுப்பான தலை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவைகள் சிறிய கண்களைப் பெற்றிருப்பினும் கூர்மையான பார்வைத் திறனையும் செவிப்புலன்களையும் பெற்றுள்ளன. இவற்றின் சிறிய தலைப்பகுதியானது கழுத்துப்பகுதி எதுவுமின்றி உடலுடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த அம்சமும் மற்ற பாலூட்டிகளினின்றும் வேறுபட்ட ஒன்றாகும். ‘பிளாட்டிபஸின்’ கால் விரல்கள் ஜவ்வு போன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் பறவையினத்தின் வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த நீச்சல் திறனையும் பெற்றுள்ளன. இது நீர்வாழ் உயிரினங்களை ஒத்த அம்சமாகும். உலகில் காணப்படும் விஷத்தன்மை வாய்ந்த சில பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் பிளாட்டிபஸைக்காட்டிலும் ஆண் பிளாட்டிபஸ் அதிக விஷத்தன்மையைக் கொண்டுள்ளன. இவைகளின் பின்புறக்கால்களில் உள்ள குழிவுப்போன்ற பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இவற்றின் கால் பகுதியில் அமைந்துள்ள விஷச்சுரப்பியும் எந்த பாலூட்டிகளிலும் இல்லாத ஒன்றாகும். இவற்றின் மூலம் குறிப்பிட்ட அழுத்தத்தை பிரயோகித்து தங்கள் எதிரிகளின் மீது மிக வேகமாக விஷத்தைப் பீய்ச்சி அடிப்பதின் மூலம் இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இதுவே இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாகும். பூமியின் மிக ஆழத்தில் அமைக்கும் உல்லாச விடுதி ‘பிளாட்டிபஸ்’ தங்கள் வலைகளில் ஏற்படுத்தும் இவைகள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழுகின்றன. இவை ஆறுகளின் ஓரக்கரைகளில் பூமியில் மிக நீண்ட வலைத்தோண்டி அதில் வசிக்கின்றன. வலை ஏறக்குறைய 50 முதல் 60 அடி வரை ஆழம் உடையவை. இவ்வளவு ஆழத்தில் வலை தோண்டி வாழக்கூடிய பாலூட்டியும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இதுவும் மற்ற பாலூட்டிகளிலிருந்து வேறுபடும் ஒரு அம்சமாகும். வலை தோண்டும் பணியில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே ஈடுபடுகின்றன. ஏனெனில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே வலையில் வசிக்கின்றன. ஆண் பிளாட்டிபஸ் தங்களின் வாழ்வை வலைக்கு வெளியே கழிக்கின்றன. மேலும் இவைகள் தங்கள் வலையில் செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உண்மையில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகளை பகர்கின்றது. வெள்ளப்பெருக்கு மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிறைய தடுப்புக்களையும் வளைவுகளையும் மண்ணினால் தங்கள் வலையிலே ஏற்படுத்துகின்றன. தங்களின் வலையின் இறுதியில் மிக நேர்த்தியான இருப்புக்களை புற்களைக்கொண்டும், இலை, தழைகளைக்கொண்டும் பரப்பி சொகுசான முறையில் அமைத்துக்கொள்கின்றன. நிச்சயமாக இவைகளின் திட்டமிட்ட இந்த ஏற்பாடுகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உண்டானது என்று எவ்வாறு நியாயப்படுத்த முடியும். நம்மைப்பொறுத்த வரை பின்வரும் வசனம் நமக்கு நல்லதொரு தெளிவைக் கொடுக்கின்றது இனப்பெருக்கத்தின் மூலம் கருவுறும் பெண் பிளாட்டிபஸ், ஒன்று முதல் நான்கு முட்டை வரை இடுகின்றது. பிறக்கும் போது குட்டிகள் (குஞ்சு) பற்களை உடையதாகவும் முடிகள் அறவே இல்லாத நிலையிலும் பிறக்கின்றன. இவைகளைத் தாய் பிளாட்டிபஸ் தன் வாலைக்கொண்டு அரவணைத்து பாதுகாக்கின்றது. இவைகள் தங்களின் இரையை பிடிக்க கையாளும் யுத்தி (முறை) மிக சுவாரசியமானது. ஆறுகள் மற்றும் குளங்களின் அடிப்பரப்பிற்குச் சென்று தங்கள் அலகு மூலம் சேறு சகதிகளைக் கிளருகின்றன. இதன் மூலம் வெளிப்படக்கூடிய கிளிஞ்சல்கள், பூச்சிக்கள் மற்றும் புழுக்களை உட்கொள்கின்றன. இரையை பிடிப்பதில் இவைகளின் அலகு பெரும் பங்கு வகிக்கின்றன. அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு உபயோகத்திற்கும் பயனில்லாத ஒரு உயிரினமாக இது கருதப்படுகின்றது. எனினும் இவைகளின் பயன்பாடுகளைபற்றி வரும் காலங்களில் தெரிய வரலாம் சர்வதேச விதிகளின்படி ‘பிளாட்டிபஸை’ கொல்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஆய்வுக்கூடத்தில் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய இவை பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன.

எகிட்னா


எகிட்னா



எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன. உருவ அமைப்பும் தகவமைப்பும் உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள். இனப்பெருக்கமும் வாழ்க்கையும் இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன. எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை இறைவன் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.

பழக்கம்







  • இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

  • வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

  • வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

  • உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள். வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

  • கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.
  • கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை’ என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

  • ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

  • நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது. கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

  • கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

  • முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன

  • . ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

  • உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

  • வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?… அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது !