Sunday, 14 June 2015

பிளாட்டிபஸ்’


பிளாட்டிபஸ்’



பிளாட்டிபஸ்’ என்னும் இந்த உயிரினம் மிகச் சிறிய பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். இவை முட்டையிட்டு பாலுட்டும் தன்மை கொண்டது இவை மற்ற பாலூட்டிகளினின்று எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் இவைகளின் செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள் இவற்றை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘பிளாட்டிபஸ்’ முட்டையிட்டு குஞ்சு பொரித்து தன் குஞ்சுகளுக்கு பால் கொடுப்பது மற்றும் அதன் உடல் அமைப்பு மற்ற எல்லா விலங்கிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். ‘வாத்து’விற்கு உள்ளது போன்ற வாய் அமைப்பு. கால்களில் அமையப்பெற்ற விஷச்சுரப்பி. கழுத்து என்பதே இல்லாத ஓர் உயிரினம். இவை தாஸ்மேனியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், பல வகைகளிலும் வித்தியாசமான செயல்பாடுகளும் உடல் தகவமைப்புகளும் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்பியல்புகளாகும். 30 முதல் 40 செ.மீ. வரை நீளமும் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை வளரக்கூடியவை. இவற்றின் வாய் அமைப்பு வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் அலகு போன்ற வாய் அமைப்பு 6 செ.மீ. வரை நீளமும் 5 செ.மீ. வரை அகலமும் உடையது. இவற்றின் வாயுடைய நுனிப்பகுதியில் மிருதுவான மோப்ப சக்தியை உணரக்கூடிய சதைப்பகுதியை கொண்டுள்ளது. (பன்றியின் வாய் பகுதியைப் போன்று), வாலும் உடலும் தடித்த மிருதுவான ரோமங்களை உடையதாகவும் பிதுங்கியது போன்ற தோற்றத்திலும் காணப்படுகின்றது. இவற்றின் வால் பகுதி தட்டையாகவும் சிறியதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் முக்கியமான எடுப்பான தலை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவைகள் சிறிய கண்களைப் பெற்றிருப்பினும் கூர்மையான பார்வைத் திறனையும் செவிப்புலன்களையும் பெற்றுள்ளன. இவற்றின் சிறிய தலைப்பகுதியானது கழுத்துப்பகுதி எதுவுமின்றி உடலுடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த அம்சமும் மற்ற பாலூட்டிகளினின்றும் வேறுபட்ட ஒன்றாகும். ‘பிளாட்டிபஸின்’ கால் விரல்கள் ஜவ்வு போன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் பறவையினத்தின் வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த நீச்சல் திறனையும் பெற்றுள்ளன. இது நீர்வாழ் உயிரினங்களை ஒத்த அம்சமாகும். உலகில் காணப்படும் விஷத்தன்மை வாய்ந்த சில பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் பிளாட்டிபஸைக்காட்டிலும் ஆண் பிளாட்டிபஸ் அதிக விஷத்தன்மையைக் கொண்டுள்ளன. இவைகளின் பின்புறக்கால்களில் உள்ள குழிவுப்போன்ற பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இவற்றின் கால் பகுதியில் அமைந்துள்ள விஷச்சுரப்பியும் எந்த பாலூட்டிகளிலும் இல்லாத ஒன்றாகும். இவற்றின் மூலம் குறிப்பிட்ட அழுத்தத்தை பிரயோகித்து தங்கள் எதிரிகளின் மீது மிக வேகமாக விஷத்தைப் பீய்ச்சி அடிப்பதின் மூலம் இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இதுவே இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாகும். பூமியின் மிக ஆழத்தில் அமைக்கும் உல்லாச விடுதி ‘பிளாட்டிபஸ்’ தங்கள் வலைகளில் ஏற்படுத்தும் இவைகள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழுகின்றன. இவை ஆறுகளின் ஓரக்கரைகளில் பூமியில் மிக நீண்ட வலைத்தோண்டி அதில் வசிக்கின்றன. வலை ஏறக்குறைய 50 முதல் 60 அடி வரை ஆழம் உடையவை. இவ்வளவு ஆழத்தில் வலை தோண்டி வாழக்கூடிய பாலூட்டியும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இதுவும் மற்ற பாலூட்டிகளிலிருந்து வேறுபடும் ஒரு அம்சமாகும். வலை தோண்டும் பணியில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே ஈடுபடுகின்றன. ஏனெனில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே வலையில் வசிக்கின்றன. ஆண் பிளாட்டிபஸ் தங்களின் வாழ்வை வலைக்கு வெளியே கழிக்கின்றன. மேலும் இவைகள் தங்கள் வலையில் செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உண்மையில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகளை பகர்கின்றது. வெள்ளப்பெருக்கு மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிறைய தடுப்புக்களையும் வளைவுகளையும் மண்ணினால் தங்கள் வலையிலே ஏற்படுத்துகின்றன. தங்களின் வலையின் இறுதியில் மிக நேர்த்தியான இருப்புக்களை புற்களைக்கொண்டும், இலை, தழைகளைக்கொண்டும் பரப்பி சொகுசான முறையில் அமைத்துக்கொள்கின்றன. நிச்சயமாக இவைகளின் திட்டமிட்ட இந்த ஏற்பாடுகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உண்டானது என்று எவ்வாறு நியாயப்படுத்த முடியும். நம்மைப்பொறுத்த வரை பின்வரும் வசனம் நமக்கு நல்லதொரு தெளிவைக் கொடுக்கின்றது இனப்பெருக்கத்தின் மூலம் கருவுறும் பெண் பிளாட்டிபஸ், ஒன்று முதல் நான்கு முட்டை வரை இடுகின்றது. பிறக்கும் போது குட்டிகள் (குஞ்சு) பற்களை உடையதாகவும் முடிகள் அறவே இல்லாத நிலையிலும் பிறக்கின்றன. இவைகளைத் தாய் பிளாட்டிபஸ் தன் வாலைக்கொண்டு அரவணைத்து பாதுகாக்கின்றது. இவைகள் தங்களின் இரையை பிடிக்க கையாளும் யுத்தி (முறை) மிக சுவாரசியமானது. ஆறுகள் மற்றும் குளங்களின் அடிப்பரப்பிற்குச் சென்று தங்கள் அலகு மூலம் சேறு சகதிகளைக் கிளருகின்றன. இதன் மூலம் வெளிப்படக்கூடிய கிளிஞ்சல்கள், பூச்சிக்கள் மற்றும் புழுக்களை உட்கொள்கின்றன. இரையை பிடிப்பதில் இவைகளின் அலகு பெரும் பங்கு வகிக்கின்றன. அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு உபயோகத்திற்கும் பயனில்லாத ஒரு உயிரினமாக இது கருதப்படுகின்றது. எனினும் இவைகளின் பயன்பாடுகளைபற்றி வரும் காலங்களில் தெரிய வரலாம் சர்வதேச விதிகளின்படி ‘பிளாட்டிபஸை’ கொல்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஆய்வுக்கூடத்தில் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய இவை பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன.

எகிட்னா


எகிட்னா



எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன. உருவ அமைப்பும் தகவமைப்பும் உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள். இனப்பெருக்கமும் வாழ்க்கையும் இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன. எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை இறைவன் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.

பழக்கம்







  • இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

  • வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

  • வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

  • உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள். வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

  • கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.
  • கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை’ என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

  • ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

  • நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது. கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

  • கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

  • முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன

  • . ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

  • உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

  • வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?… அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது !

ஜிப்


ஜிப்


கொக்கி இல்லாத புதிய முறையை கண்டுபிடிக்க வேண்டும் என முயன்ற அமெரிக்க டிசைனர் ஜட்சன் 1893 இல் உருவாக்கியதுதான் இந்த ஜிப். இந்த மகத்தான கண்டுபிடிப்பை அந்த ஆண்டு நடந்த உலக கண்காட்சியில் விற்பனைக்கு வைத்தார். ஆனால் , பார்வையிட்ட இரண்டு கோடி பேரில் இருபது பேர்கூட அதை வாங்கவில்லை. பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து 1917 இல் நாம் தற்போது உபயோகபடுத்தும் ஜிப் வகைகள் தயாரிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அவை பரவலாக பழக்கத்துக்கு வந்தன. இப்போது ஜிப் இவளவு பயனுள்ள ஒரு பொருளாக பயன் படுகிறது நமது அன்றாட வாழ்க்கையில் என்றால் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு தான்

                        ஆயகலைகள்



                        ஆயகலைகள் 64


என்னென்ன என்று தெரியுமா? 1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாஸ்திரம் 8. ஜோதிடம் 9. தர்ம சாஸ்திரம் 10. யோக சாஸ்திரம் 11. மந்திர சாஸ்திரம் 12. சகுன சாஸ்திரம் 13. சிற்ப சாஸ்திரம் 14. வைத்திய சாஸ்திரம் 15. உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுர பாடனம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. சத்தப்பிரும்மம் 23. வீணை 24. வேணு (புல்லாங்குழல்) 25. மிருதங்கம் (மத்தளம்) 26. தாளம் 27. அத்திரப் பரிட்சை 28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்) 29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்) 30. கஜப் பரிட்சை (யானை எற்றம்) 31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்) 32. இரத்தினப் பரிட்சை 33. பூமிப் பரிட்சை 34. சங்கிராம விலக்கணம் 35. மல்யுத்தம் 36. ஆகருடனம் (ஆகர்ஷணம்) 37. உச்சாடனம் 38. வித்து வேடனம் (ஏவல்) 39. மதன சாஸ்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. இரசவாதம் 43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) 44. பைபீலவாதம் (மிருக பாஷை) 45. கவுத்துவ வாதம் 46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்) 47. காருடம் 48. நட்டம் 49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) 50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) 51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) 52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது) 53. அதிரிசியம் 54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) 55. மகேந்திர ஜாலம் 56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) 57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்) 58. வாயுஸ்தம்பம் 59. திட்டி ஸ்தம்பம் 60. வாக்கு ஸ்தம்பம் 61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்) 62. கன்னத்தம்பம் 63. கட்கத்தம்பம் 64. அவத்தைப் பிரயோகம் இதில் பலவற்றிற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்

தவளை

தவளை



தவளையை பற்றி தெரிவதற்கு முன்பு ஒன்றை சொல்லி கொள்ளுகிறோம் முதலில் உங்கள் பகுதிகளில் தவளை அதிகமாக இருந்தால் தயவு செய்து கொள்ள வேண்டாம் .ஏன் என்றால் தவளையால் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது .என்னவென்றால் நமக்கு நோயை உண்டாக்கும் கொசுக்களை தவளைகள் தான் அழிக்கிறது தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும்.முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும் திரண்டு உருண்ட உடலும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும் புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும் குளங்களிலும் காணப்படுவன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது கூடு கட்டி அதன் மீது முட்டையிடும் ஒரு வகைதவளை இனமொன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய அறிவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார். இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும் மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக் கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய மாநிலங்களான கேரளம் மற்றும் கருநாடகம் ஆகியவற்றிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக் காடுகளில் இவ் வகை தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் வயநாடு மற்றும் கருநாடகத்தின் குடகு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பலத்த ஆய்வின் பின்னர் இவை கண்டுபிடிக்கப்பட்டன. 12 செமீ (5 அங்) நீளமுள்ள இந்த சிறிய தவளைகள் இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று பட்டுப்பூச்சிக் கூடு போன்ற கூடுகளை அமைக்கின்றன. அத்துடன் கூடுகளின் முனைகளை இறுக்கக் கட்டுவதற்காக ஒரு திரவப் பொருளை வெளிவிடுகின்றன. ‘இவ்வகை மிகவும் அரிதான தவளைகள் ஆசியாவிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்று முனைவர் பிஜு பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில இலைகளில் கூடு கட்டும் தவளைகள் முட்டைகளை இடும் போதே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன என்றும் கூடு கட்டும் வேலையில் ஆண் தவளைகளும் பெண் தவளைகளும் இணைந்தே பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த இந்தியத் தவளைகள் முட்டைகளை இட்ட பின்னரே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன. தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத் தவளை இருக்கிறது.ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது.ஆயிரத்துத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தத் தவளைக்கு ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர் கூறுகிறார். மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன் புரியாத புதிராகவே உள்ளது. 2001 ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும் இது புதிய இனம்தான் என்பதை பல கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர் கூறுகிறார். மிகச்சிறிய ஒரு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகில் மொத்தத்தில்ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு உள்ளாகியுள்ளன. பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் – விஞ்ஞானி தகவல் இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளைகள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றார்.இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்து உள்ளார். இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல் கிரான்ட் ஆய்வு செய்து கொண்டிருந்தார். பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண் தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும் வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்களுக்கு பிறகு அதே ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர் கூறுகிறார். அந்த தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள் வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வண்டு



                                                                       வண்டு

* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன
. * உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!
* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.
* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!
* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.
* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை – கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.
* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.
* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன.

இனம்


* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.
* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.
* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.
* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
* மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.
* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.
* ‘லங் ஃபிஷ்’ என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.
* ஆழ்கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக்கின்றன.
* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக்கூடியவை.
* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்
* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது ‘க்ளீனர்’ மீன்
* ‘பஃபர் ஃபிஷ்’ தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!
* ‘சூரிய மீன்’ என்ற வகை மீன் கோடிக்கணக்கில் முட்டைகள் இடும்.
* ‘சர்ஜன் மீன்’ என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.

நீர் நாரைகள்




நீர் நாரைகள்

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது என்று கேட்டால் “அதுவா நிக்குது விடுங்கப்பா “என்று கூறுவோர் நம்மில் பலர். ஆனால் விஞஞானிகள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.அதைப்பற்றிய விளக்கம் பின்வருமாறு நீர் நாரை (Flamingo)என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை. விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை. இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள். நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிலடெல்பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன் சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள். இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக மனிதர்கள் இடக்கை வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்கள். நீர்நாரைகள் தமது தலைப்பகுதியை ஒரே பக்கத்தில் அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை அவதானித்தார்கள். அத்துடன் தலைப்பகுதியின் எப்பக்கத்தை அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை வைத்து அவை தமது கூட்டத்தில் ஏனைய பறவைகளுடன் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது. வலப்பக்கத்தில் தலைப்பகுதியை அதிகநேரம் ஓய்வாக வைத்திருக்க விரும்பும் நீர்நாரைகள் அதிக முரட்டுத்தனத்துடன் தென்படுவதாக மத்தியூ அண்டர்சன் தெரிவித்தார். இதனை அடிப்படையாக வைத்து நீர்நாரைகள் ஒரு காலில் நிற்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தார்கள். இதற்காக அவர்கள் கரிபியன் நீர்நாரைகளை (Phoenicopterus ruber) பிலடெல்பியா விலங்குக்காட்சிச் சாலையில் பல மாதங்களாக அவதானித்தார்கள். எந்தக்காலில் அவை நிற்க விரும்புகின்றன என்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவை குளிர் நீரில் நிற்கும் போது நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பதையே விரும்புகின்றன. ஒருகாலில் நிற்பதன் மூலம் அவை பெருமளவில் ஆற்றலை உள்வாங்கிச் சேமிப்பதன் மூலம் அவை நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் நடக்க முடிகிறது என அண்டர்சன் தெரிவித்தார். இரண்டு கால்களையும் நீரில் வைப்பதன் மூலம் அவை அதிகளவு வெப்பத்தை இழக்க வேண்டி வரலாம். ஆனாலும் இவை தவிர ஒரு காலில் நிற்பதன் மூலம் வேறு பயன்களையும் நீர்நாரைகள் பெறலாம் என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கவில்லை

மரண வெளி



மரண வெளி


அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந் திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்க ள் தெளிவாகக் காணப் படுகி ன்றனவாம். இங்குள்ள கற்கள் இரண் டு அல்லது மூன்று வருட ங்க ளில் முழு பிர தேச த்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற் கள் ஒரே நேரத்தில் பயண த்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமி யைச் சுற்றி வருகின்ற ன. சில சமயங்களில் அவற்றி ல் ஒருகல் வலது பக்க மோ இடது பக்க மோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர் ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவேசெய்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பிற் கு அருகில் இருக்கும் மலையி ல் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங் கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன. இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்கு ள்ள களி மண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான் நகர் கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில் லையாம். எனவே அந்த வாதமும் எடு படாது. நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தி யே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வரு டம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர் ந்திருக்கிறது. கல்லின் அளவுக் கும் அவை நகர்வதற்கும் எது வித தொடர்பும் கிடையாது என் பதை இது காட்டுகிறது. இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல் லாவிட்டாலும் கற்களின் நட மாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான்.

அகதிகள் தினம்


அகதிகள் தினம்



மனிதனாலும் இயற்கையாலும் தனது வாழ்விடங்களை விட்டு துரத்தப்பட்டு ஏதிலிகளாக வாழும் மக்களை நினைவு கூரும் அகதிகள் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் சபை யூன் 20ஆம் திகதியை உலக அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இன்றைய நாள் மற்றொரு முக்கியத்துவம் மிக்கதாகவும் கருதப்படுகிறது. 1951ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் அகதிகள் பிரகடனத்தின் 60ஆண்டு பூர்த்தி தினம் இன்றாகும். அகதிகள் தினத்தை முன்னிட்டு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்றும் இடம்பெற்றது. அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இன்று உலகில் 43.7மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்களில் ஆப்கானிஸ்தான் அகதிகள் 3 மில்லியன் மக்களாகும். ஆப்கானிஸ்தானையடுத்து பாகிஸ்தான், ஈரான், ஈராக், சோமாலியா, சிரியா, சிறிலங்கா ஆகிய நாடுகளைச்சேர்ந்த மக்கள் உலகெங்கும் அகதிகளாக உள்ளனர் என ஐ.நா.வின் முகவர் அமைப்பான யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது. 1993ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அகதிகளாக இருந்த மக்களில் 15551பேர் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தனது முற்றத்தில் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு அந்நிய மண்ணில் வாழும் ஏதிலிகளுக்காக ஐ.நா.ஒதுக்கிய நாள் யூன் 20ஆகும்


எலுமிச்சை


தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்னையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்னைகளைப் போக்கும். தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் `சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப்படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும். சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம். உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் செரிமான பிரச்னை குணமாகி விடும். எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்கள் எளிதில் குணமாகிவிடும். சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.