Sunday 14 June 2015

அகதிகள் தினம்


அகதிகள் தினம்



மனிதனாலும் இயற்கையாலும் தனது வாழ்விடங்களை விட்டு துரத்தப்பட்டு ஏதிலிகளாக வாழும் மக்களை நினைவு கூரும் அகதிகள் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் சபை யூன் 20ஆம் திகதியை உலக அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இன்றைய நாள் மற்றொரு முக்கியத்துவம் மிக்கதாகவும் கருதப்படுகிறது. 1951ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் அகதிகள் பிரகடனத்தின் 60ஆண்டு பூர்த்தி தினம் இன்றாகும். அகதிகள் தினத்தை முன்னிட்டு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்றும் இடம்பெற்றது. அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இன்று உலகில் 43.7மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்களில் ஆப்கானிஸ்தான் அகதிகள் 3 மில்லியன் மக்களாகும். ஆப்கானிஸ்தானையடுத்து பாகிஸ்தான், ஈரான், ஈராக், சோமாலியா, சிரியா, சிறிலங்கா ஆகிய நாடுகளைச்சேர்ந்த மக்கள் உலகெங்கும் அகதிகளாக உள்ளனர் என ஐ.நா.வின் முகவர் அமைப்பான யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது. 1993ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அகதிகளாக இருந்த மக்களில் 15551பேர் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தனது முற்றத்தில் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு அந்நிய மண்ணில் வாழும் ஏதிலிகளுக்காக ஐ.நா.ஒதுக்கிய நாள் யூன் 20ஆகும்

No comments:

Post a Comment