Sunday, 12 March 2017

மண்ணெண்ணெயில் பறக்கப்போகும் இஸ்ரோவின் புதிய ராக்கெட்... 'கிலி'யில் அமெரிக்க நிறுவனங்கள்!!

உலக விண்வெளி ஆய்வில் மிக முக்கிய அத்தியாயத்தை நோக்கி இந்திய விண்வெளி ஆய்வும மையமான இஸ்ரோ பயணித்து வருகிறது. மிக அதிக எடையை சுமந்து செல்லும் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு இருக்கிறது. மண்ணெண்ணெயில் இயங்கும் எரிபொருள் அமைப்புடன் தயாராகி வரும் இந்த ராக்கெட் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்திய ராக்கெட்டுகளை கண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் கிலி பிடித்த நிலையில், தற்போது இந்த புதிய ராக்கெட் அவர்களது கவலையை மேலும் அதிகமாக்கியிருக்கிறுத. அதேநேரத்தில், இந்த புதிய ராக்கெட், இந்திய விண்வெளி ஆய்வின் வல்லமையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பில் பெண் பொறியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஃபோர்டு முடிவு! காராகவும், ட்ரோனாகவும் செயல்படும் புதுமையான போக்குவரத்து சாதனம்: ஏர்பஸ் அறிமுகம்! ஹார்லி டேவிட்சன் பெண் உரிமையாளர்களுக்கான முதல் குழு இந்தியாவில் துவக்கம்! Featured Posts சாதனை ஒரேநேரத்தில் 22 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட்டை அடுத்த மாதம் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இது இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த திருப்பம் இந்த வேளையில், மிக அதிக எடையை சுமந்து செல்லும் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதாவது, இந்த ராக்கெட் 10 டன் எடையுடையே செயற்கைகோள்களை சுமந்து கொண்டு ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்டில் நிலைநிறுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கும். கோளப்பாதை இதுவரை அதிகபட்சமாக 2.5 டன் எடையுள்ள செயற்கைகோள்களை இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் பூமியிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்டில் நிலைநிறுத்தும் வல்லமையை பெற்றிருக்கிறது. பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!

புதிய ராக்கெட் ஆனால், புதிய எரிபொருள் நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ராக்கெட் 10 டன் எடையுடைய செயற்கைகோள்களை ஜியோசிங்ரோனஸ் எனப்படும் மத்திய தூர புவி வட்ட கோளப்பாதையில் நிலைநிறுத்தும். புதிய மைல்கல் ஜியோசிங்க்ரோனஸ் கோளப்பாதையில் அதிக எடையுடைய செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. இந்த கோளப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைகோள்கள் பூமிக்கு இணையான வேகத்தில் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் தானாக பயணிக்கும். ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட் இந்த கோளப்பாதையில் நிலைநிறுத்தும்போது, பூமிக்கு இணையான வேகத்தில் விண்வெளியில் செயற்கைகோள் சுற்றும் என்பதால், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு தேவையான தகவல்கள், கண்காணிப்பை எளிதாக மேற்கொள்ள முடிகிறது. கிரையோஜெனிக் எஞ்சின் அதிக எடையை சுமந்து செல்லும் இந்த ராக்கெட்டிற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய எஞ்சின் தயாரிப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. வேலைவாய்ப்பில் பெண் பொறியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஃபோர்டு முடிவு! காராகவும், ட்ரோனாகவும் செயல்படும் புதுமையான போக்குவரத்து சாதனம்: ஏர்பஸ் அறிமுகம்! ஹார்லி டேவிட்சன் பெண் உரிமையாளர்களுக்கான முதல் குழு இந்தியாவில் துவக்கம்! Featured Posts கோத்ரேஜ் தயாரிப்பு கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பு பணியை கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இஸ்ரோ ராக்கெட்டுகளுக்கான விகாஸ் எஞ்சின்களை கோத்ரேஜ் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. எரிபொருள் இந்த புதிய கிரையோஜெனிக் எஞ்சின் மண்ணெண்ணெய் மறறும் திரவ ஆக்சிஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஜிஎஸ்எல்வி எம்கே3

 ஜிஎஸ்எல்வி- எம்கே3 தற்போது சிஇ20 என்ற கிரையோஜெனிக் எஞ்சின் மூலமாக 4 டன் எடையுடைய செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் படைத்தை ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டின் புரோட்டோடைப்பை ஏற்கனவே இஸ்ரோ தயாரித்துள்ளது. விரைவில் அடுத்த ஆண்டு இந்த புதிய ராக்கெட்டை தகவல் தொடர்பு செயற்கைகோள்களுடன் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி எம்கே3 இந்த ராக்கெட் 65 மீட்டர் நீளமும், 732.6 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் மூலமாக 10 டன் எடையுடையே செயற்கைகோள்களை குறைந்த தூர புவியின் அடி கோளப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இதைத்தொடர்ந்து, 10 டன் எடையை சுமந்து கொண்டு பறக்கும் புதிய ராக்கெட் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த செலவு மிக குறைவான செலவீனத்தில் அதிக எடையுடைய செயற்கைகோள்களை சுமந்து செல்லும் இஸ்ரோவின் புதிய ராக்கெட் உலக அளவில் ராக்கெட் ஏவும் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மேலும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!   

No comments:

Post a Comment