கூடிய விரைவில் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டமும் அந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கும் மின் மோட்டார் 140 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்குமாம். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் பயணிக்கும் வல்லமையை பெற்றிருக்கும். ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 தவிர்த்து, புத்தம் புதிய எலக்ட்ரிக் சூப்பர் கார் மாடலையும் மஹிந்திரா தயாரித்து வருகிறது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை தனது கீழ் செயல்படும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கி வருகிறது.
பேட்டரியில் இயங்கும் கார்களை தயாரித்து வரும் ரேவா நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா கார் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் பின்னர், ரேவா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பேட்டரியில் இயங்கும் புதிய கார் மாடல்களை தயாரிப்பதில் மஹிந்திரா மும்முரம் காட்டி வருகிறது.
அதற்காக முதலீடுகளையும் தாராளமாக ஒதுக்கி வருகிறது. பேட்டரியில் இயங்கும் வெரிட்டோ செடான் கார் மற்றும் மினி லோடு வேன் போன்றவற்றை ஏற்கனவே தயாரித்து சோதனை செய்து வருகிறது மஹிந்திரா. இந்த நிலையில், தனது புகழ்பெற்ற எஸ்யூவி மாடல்களான ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய கார்களின் மின்சார வகை மாடல்களை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 மாடல்கள் விற்பனையில் இருக்கிறது. ஆனால், முழுவதுமாக மின் மோட்டார் துணையில் இயங்கும் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்களை விரைவில் மஹிந்திரா அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லா, ரிமாக் போன்ற நிறுவனங்களின் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் கார் மாடல்களை போன்றே, மஹிந்திரா உருவாக்கி வரும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலும் மிகுந்த செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபார்முலா இ என்ற மின்சார கார் பந்தய அணியையும் மஹிந்திரா வசம் இருக்கிறது. ஃபார்முலா இ பந்தயத்தில் மின்சார கார்களின் தொழில்நுட்பங்களையும் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் மஹிந்திரா புகுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவை தவிர்த்து, பேட்டரியில் இயங்கும் டூரிஸ்ட்டர் மினி பஸ்சையும் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த புதிய மாடல்கள் அனைத்தும் சந்தைக்கு வந்துவிடும் என்றும் மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment