Monday 13 March 2017

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று தெரியுமா?

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தீர்வளிக்கும். தண்ணீர் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடாமலும் தடுக்கும். மேலும் தண்ணீர் அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவும்.ஆனால் அந்த நீரைக் குறிப்பிட்ட நேரங்களில் குடிக்கக்கூடாது. உங்களுக்கு எந்த நேரத்தில் நீரைக் குடிப்பது நல்லது, எம்மாதிரியான நேரத்தில் நீரைக் குடிக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரி, இப்போது ஒருவர் எந்த நேரத்தில் நீரைக் குடிக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.


தருணம் #1

ஒருவர் ஏற்கனவே அளவுக்கு அதிகமான நீரைக் குடித்தப் பின், தேவையில்லாமல் நீரைக் குடிக்கக்கூடாது. நீர் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் எதுவுமே அளவாக இருந்தால் தான் என்பதை மறக்க வேண்டாம். ஒருவேளை ஒருவர் ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், உடலில் உள்ள இயற்கையான உப்பு வெளியேற்றப்பட்டு,பின் அவஸ்தைப்படக்கூடும்.




தருணம் #2

உங்கள் உடலில் நீர்ச்சத்து போதுமானாதாக இல்லாவிட்டால், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வரும். இம்மாதிரியான நேரத்தில் நீரை அதிகம் பருக வேண்டும். ஒருவேளை மஞ்சளாக இல்லாமல், தெளிந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடலில் போதுமான அளவில் நீர்ச்சத்து உள்ளது, நீரை அதிகம் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அர்த்தம்.


தருணம் #3

உணவு உண்பதற்கு முன் 1 டம்ளர் நீரைக் குடிப்பதன் மூலம், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம். ஆனால் உணவுக்கு முன் அல்லது பின் அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், பின் மிகுந்த அசௌகரியத்தால் அவஸ்தைப்படக்கூடும்.


தருணம் #4

சாதாரண உடற்பயிற்சிக்கு பின் நீரைக் குடிப்பது எவ்வித தவறும் இல்லை. ஆனால் மிகவும் கடுமையான உடற்பயிற்சியை செய்த பின், உடலில் உள்ள எலக்ட்டோலைட்டுக்கள் வியர்வை மூலமாக வெளியேறியிருக்கும். இந்நேரத்தில் நீரைக் குடிப்பது நல்லதல்ல. மாறாக, இளநீரைக் குடிப்பதே மிகவும் நல்லது.


தருணம் #5

தற்போது தாகத்தை தணிப்பதற்கு என்று ஏராளமான குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. ஆனால் எவ்வளவு தாகம் எடுத்தாலும், நீரைக் குடியுங்கள். மாறாக குளிர்பானங்களைப் பருகினால், அது உங்கள் பசியை அதிகமாக தூண்டிவிடும். மேலும் குளிர்பானங்களில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் பருமனடையவும் செய்யும்.



No comments:

Post a Comment