Monday, 13 March 2017

தினமும் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்-ன்னு தெரியுமா?


நாம் பின்பற்றும் சில இயற்கை வைத்தியங்கள் பார்க்க முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அவைகள் நல்ல பலனை விரைவில் காண்பிக்கும். அதில் ஒன்று தான் தொப்புளில் எண்ணெய் வைப்பது. இந்த பகுதியில் எண்ணெயை தினமும் வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.இக்கட்டுரையில் தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கடுகு எண்ணெய்


உதடுகளில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறதா? மூட்டு வலி உள்ளதா? அப்படியெனில் சிறிது கடுகு எண்ணெயை தொப்புளில் வையுங்கள். தொப்புளுக்கும், உதடு மற்றும் மூட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்கலாம். ஆனால், உண்மையிலேயே நல்ல தீர்வு கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்

தினமும் தொப்புளில் தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயிலை வைப்பதன் மூலம், கருவளம் மேம்படும்.

பிராந்தி


மாதவிடாய் கால வயிற்றுப் பிடிப்புக்களில் இருந்து விடுபட, பிராந்தியில் நனைத்த பஞ்சுருண்டையை தொப்புளில் வைத்து வாருங்கள்.

No comments:

Post a Comment